பிரெக்ஸிட் விவகாரம்: பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக தெரசா மே அறிவிப்பு


பிரெக்ஸிட் விவகாரம்: பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக தெரசா மே அறிவிப்பு
x
தினத்தந்தி 24 May 2019 9:54 AM GMT (Updated: 24 May 2019 9:54 AM GMT)

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தாம் உடனடியாக விலகுவதாக தெரசா மே அறிவித்துள்ளார்.

லண்டன்,

2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து  நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான  ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஜூன் 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நாடாளுமன்ற ஒப்புதலை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் தாம் உடனடியாக விலகுவதாகவும் தெரசா மே அறிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story