உலக செய்திகள்

நேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி + "||" + Four killed in three explosions in Nepal's Kathmandu

நேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

நேபாளத்தின் காத்மாண்டுவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 4 பேர் பலி
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில், 4 பேர் பலியாகினர்.
காத்மாண்டு,

நேபாள தலைநகரான காத்மண்டுவில்,  அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நேபாள இராணுவம் மற்றும்  போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். எனினும் எந்த இயக்கமும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கியதால் அதிரடி நடவடிக்கை
பெங்களூருவில் திருட்டு வழக்கில் கைதாகி போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடிய நேபாளத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
2. நேபாளத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 இந்தியர்கள் பலி
நேபாளத்தில் நிகழ்ந்த விபத்தில், 2 இந்தியர்கள் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தான் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
4. நேபாளத்துக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு
நேபாளத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5. ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்; 15 பாதுகாப்பு படையினர் காயம்
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் குண்டுகளை வெடிக்கச் செய்து நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 15 பேர் காயம் அடைந்தனர்.