உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஜப்பான் தங்களிடம் இருந்து எப்.35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க முடிவு செய்து உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.


* பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ மாகாணத்தில் உள்ள சாவ் கோன்காலோ நகரில் மதுபான விடுதிக்கு வெளியே ஏராளமான இளைஞர்கள் திரண்டு மது, ஆடல் பாடல் என களிப்பில் திளைத்திருந்தனர். அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர்.

* பெரு நாட்டின் ஆல்டோ அமேசோனஸ் மாகாணத்தில் உள்ள யூரிமோகுவாஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 15 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

* ஜப்பான் தங்களிடம் இருந்து எப்.35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க முடிவு செய்து உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதன் மூலம், எப்.35 ரக போர் விமானங்களை அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கும் அமெரிக்க நட்பு நாடாக ஜப்பான் இருக்கும் எனவும் டிரம்ப் கூறினார்.

* ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் ஹதிடா நகரில் ராணுவ வாகனங்களை குறிவைத்து, ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியாகினர்.
1 More update

Next Story