ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மாரிசன் மீண்டும் பதவியேற்பு


ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மாரிசன் மீண்டும் பதவியேற்பு
x
தினத்தந்தி 29 May 2019 12:09 PM GMT (Updated: 29 May 2019 12:09 PM GMT)

ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மாரிசன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

சிட்னி

ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து லிபரல் கட்சி உறுப்பினர்கள், ஸ்காட் மாரிசனை மீண்டும் பிரதமராக தேர்வு செய்தனர்.

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்காட் மாரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

துணைப்பிரதமர் மைக்கேல் மெக்கார்மேக் (Michael McCormack) மற்றும் அமைச்சர்களும் பதவியேற்றனர். மேலும் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, பழங்குடியினத்தை சேர்ந்த கென் வியாத் என்பவர் (Ken Wyatt) உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.

ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய கங்காரு தோலை அணிந்து வந்து பதவியேற்ற அவருக்கு, விழாவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.


Next Story