உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 21 Jun 2019 8:17 PM GMT)

சவுதி அரேபியாவில் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


* சவுதி அரேபியாவின் ஜிஷான் மாகாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆளில்லா விமானம் தங்களின் எல்லைக்குள் நுழைந்ததுமே அதனை சுட்டுவீழ்த்தி விட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

* அமெரிக்கா-ஈரான் பிரச்சினை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரக ராணுவமும், ஜோர்டான் நாட்டு ராணுவமும் இணைந்து அபுதாபியில் கூட்டுப்பயிற்சியை தொடங்கி உள்ளது.

* விக்கீலீக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்சேவுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் சுவீடனை சேர்ந்த ஓலாதினி என்பவர் ஈக்குவடாரில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் ஈக்குவடார் கோர்ட்டு நேற்று அவரை விடுதலை செய்தது.

* சீனாவில் அயல்நாட்டு மொழி அல்லது பெயர்களை குறிக்கும் நிறுவனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை சீன மொழியில் பெயர் மாற்றம் செய்ய மாகாண நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story