உலக செய்திகள்

உலகின் சிறந்த சைக்கிள் தடம் + "||" + World's best bicycle track

உலகின் சிறந்த சைக்கிள் தடம்

உலகின் சிறந்த சைக்கிள் தடம்
பெல்ஜியத்தின் லிம்பெர்க் நகரில் உலகின் சிறந்த சைக்கிள் தடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசலான பகுதி, குறுக்கிடும் நீர்நிலை எல்லா தடைகளையும் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பிரத்தியேக கட்டுமான அமைப்புடன் இந்த சைக்கிள் தடத்தை உருவாக்கியுள்ளது “பைசைக்கிள் ஆர்கிடெக்சர் பையென்லே” எனும் அமைப்பு. 

லீ பெல்மேன் என்பவர் தலைமையிலான இந்த அமைப்பு தங்கள் வடிவமைப்பு சைக்கிள் தடத்தில் சைக்கிள் பயணம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த சைக்கிள் தடம் ஒரு குளத்தின் ஊடே 200 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பாதையாக பயணிக்கிறது. அதேபோல நெரிசல் மிக்க சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் சிறிய வகை பிளாஸ்டிக் பாலமாக வாகனங்கள் செல்லும் காங்கிரீட் பாலத்தின் கிழே புகுந்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெளியேறும் வகையில் சிறந்த கட்டமைப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது. 

நெருக்கடியான இடங்களில் சைக்கிள் பார்க்கிங் எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டான கட்டமைப்பாகவும் இது கருதப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல், நெரிசல் மிக்க நகரத்திற்கு ஏற்ற வகையிலான சைக்கிள் பயன்பாட்டின் அவசியத்தை உலகிற்கு உணர்த்துகிறது இந்த சைக்கிள் தடம்.