ஜி-20 மாநாடு: ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி


ஜி-20 மாநாடு:  ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 Jun 2019 1:29 AM GMT (Updated: 27 Jun 2019 1:29 AM GMT)

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் வந்து சேர்ந்தார். வரும் 28-29 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது.

ஒசகா, 

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் வரும் 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 

இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி- 20  நாடுகளின் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் நமது நாட்டின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக தனிவிமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று ஜப்பான் சென்றடைந்தார். ஒசாகா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

ஜி 20 மாநாட்டின் போது, பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், சீன அதிபர், அமெரிக்க அதிபர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.  ஜி-20’ உச்சி மாநாடு   28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் 6-வது ஜி -20 மாநாடு இதுவாகும்.  மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ மகளிருக்கு அதிகாரமளித்தல், செயற்கை நுண்ணறிவு,  பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்பட பொது நலன்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story