அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்


அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 27 Jun 2019 10:08 AM IST (Updated: 27 Jun 2019 10:08 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஜப்பானின் ஒசாகா நகரில் நாளை (ஜூன் 28) மற்றும் நாளை மறுநாள் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.   இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 

இந்த  மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மோடியை சந்திக்க இருக்கும் நிலையில்,  அமெரிக்க  பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப்  வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ பிரதமர் மோடியை சந்திப்பதை எதிர் நோக்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில்  அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது.  அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.  அதிக வரி விதிப்பை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகையை கடந்த ஜூன் 1 ஆம் தேதியோடு அமெரிக்கா ரத்து செய்தது.  இதையடுத்து, இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரிகளை விதித்தது.
1 More update

Next Story