வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார்: டிரம்ப் திடீர் அறிவிப்பு


வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார்: டிரம்ப் திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2019 3:39 AM GMT (Updated: 29 Jun 2019 6:57 AM GMT)

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒசாகா,

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென்கொரியா பயணம் மேற்கொள்கிறார்.   இந்த நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க திடீரென டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ சீன அதிபருடனான சந்திப்பு உள்பட சில முக்கிய சந்திப்புகளுக்கு பிறகு நான் தென் கொரியா செல்ல உள்ளேன். அங்கு செல்லும் போது, வடகொரியாவின் அதிபர் இதை கவனித்தால் எல்லையில் அவரை(கிம்) நான்  சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

பிப்ரவரி மாதம் வியட்நாமில் உள்ள ஹனோயில், இருநாட்டு அதிபர்களும் சந்தித்ததிலிருந்து வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது தொடர்பான இரண்டாவது பேச்சுவார்த்தை எந்தவித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்தது.

வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிட வேண்டும் என அமெரிக்கா தெரிவிக்கிறது. தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை முழுமையாக விலக்க வேண்டும் என வடகொரியா கேட்கிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

Next Story