பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசன் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்டதோடு, அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தோடு, ”மோடி எவ்வளவு சிறப்பான நபர்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று துவங்கியது. 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மீண்டும் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே இன்று நடைபெறும் சந்திப்பு உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இரு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பின் போது சுமுக உடன்பாடு ஏற்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






