உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 30 Jun 2019 3:30 AM IST (Updated: 30 Jun 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு, வெனிசூலா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது


* சவுதி அரேபிய பத்திரிகையாளர் கசோக்கி, துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டது தனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதே நேரத்தில் இந்தக கொலையில் யாரும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விரல் நீட்டி குற்றம்சாட்டவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

* அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு, வெனிசூலா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* ஆஸ்திரேலியா நாட்டில் புளூ காய்ச்சல் பாதித்து, பலியானவர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்து விட்டது.

* பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

* சிரியாவில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ரஷியா கூறி உள்ளது.
1 More update

Next Story