மியான்மரில் பயங்கர நிலச்சரிவு: சுரங்கம் இடிந்து விழுந்து 18 பேர் பலி

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்ததில் 18 தொழிலாளர்கள் பலியாகினர்.
யாங்கோன்,
மியான்மர் வடக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லையையொட்டி உள்ள கச்சின் மாகாணத்தில் தங்கம், பச்சை மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இதனால் அந்த மாகாணத்தில் அதிக லாபம் ஈட்டக் கூடிய பிரதான தொழிலாக சுரங்க தொழில் விளங்குகிறது. அங்கு எண்ணற்ற சுரங்க நிறுவனங்கள் நிறுவப்பட்டு, கனிம வளங்கள் சேகரிக்கப்படுகின்றன.
முறையான உரிமம் பெறாமலும், உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்காமலும் பல சுரங்கங்கள் செயல்படுவதால், அடிக்கடி பெரிய அளவிலான சுரங்க விபத்துகள் நிகழ்ந்து, உயிர் பலி ஏற்படுகிறது.
தற்போது மியான்மரில் மழைக்காலம் நீடிக்கிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மழைக்காலத்தில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதனால் கச்சின் மாகாணத்தில் சுரங்கப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டாலும், புனரமைப்பு பணிகள் மற்றும் சில பணிகளுக்காக ஊழியர்கள் சுரங்கங்களிலேயே தங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் கச்சின் மாகாணத்தின் பாகன்ட் மாவட்டத்தில் உள்ள பச்சை மாணிக்க கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு அங்கேயே படுத்து உறங்கினர்.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை அந்த பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் உறங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இதில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர்.
எனினும் 18 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் இதே போல் நிலச்சரிவு காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 54 ஊழியர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.

Related Tags :
Next Story