ஜப்பானின் ஹோன்சு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


ஜப்பானின் ஹோன்சு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 7:30 PM GMT)

ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.


* ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் உள்ள பான்ட் நகரில் போலீஸ் சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 4 போலீசார் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் உள்ள திப்லோவ் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு பயங்கரவாதிகள் தீவைத்துவிட்டு தப்பி ஓடினர்.

* அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story