சூடானில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்


சூடானில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 July 2019 3:31 AM IST (Updated: 31 July 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

சூடானின் எல் ஒபியட் நகரில், போக்குவரத்து வசதியை மேம்படுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.


* ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானின் முன்னாள் மேயர் முகமது அலி நஜாபி. இவர் கடந்த மே மாதம் தனது 2-வது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கில் முகமது அலி நஜாபிக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

* சூடானின் கோர்டோபன் மாகாணத்தின் தலைநகர் எல் ஒபியட் நகரில், போக்குவரத்து வசதியை மேம்படுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 3 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

* பிரேசிலின் பாரா மாகாணத்தில் உள்ள சிறையில் இருதரப்பு கைதிகள் இடையே மோதல் வெடித்தது. இந்த கலவரத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 16 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இருதரப்பு மோதலில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் 1,366 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 2,446 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள லேக் ஹில்லே நகரை சேர்ந்த ஒரு நபர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு, பக்கத்து வீட்டில் இருந்த ஒரு சிறுவனையும் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* ஜப்பானில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் இறந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story