தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த வாலிபர்


தன்னை காதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த வாலிபர்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:26 PM IST (Updated: 28 Aug 2019 4:26 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் ஒருவர் தன்னை காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது.

இந்தோனேஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே மணமேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது. 

இந்த சம்பவம் இந்தோனேஷியா  கெட்டபாங் மாவட்டம் ஏர்டாரப் கிராமத்தில் உள்ள பாங்கலன் குக்கிராமத்தில் நடந்து உள்ளது.

இதுகுறித்து மணமகன் கூறியதாவது:-

 "இரண்டு பெண்களும் என்னை காதலித்தனர். ஆதலால், நான் இருவரையும் திருமணம் செய்து கொண்டேன். நான் அவர்களின் வரதட்சணைக்கோ அல்லது வேறு எதற்காகவோ ஆசைப்பட்டு திருமணம் செய்யவில்லை. நான் ஒருவரை மட்டும் திருமணம் செய்தால் மற்றவர் மணம் நொந்து விடுவார். என்னால் யார் மனமும் உடைந்து போவதை நான் விரும்பவில்லை, இதனால் ஒரே நேரத்தில் இருவரையும் திருமணம் செய்துவிட்டேன். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்த பின்பு தான் இந்த முடிவை எடுத்தேன்" என அவர் தெரிவித்துள்ளார். 

இவரது திருமண புகைப்படம் மற்றும் வீடியோ முகநூலில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. 
1 More update

Next Story