அணு வினியோகக் குழுவில் உறுப்பினரானால் நாங்கள் ஒரு முன்மாதிரியாக விளங்குவோம் -பிரதமர் மோடி


அணு வினியோகக் குழுவில் உறுப்பினரானால் நாங்கள் ஒரு முன்மாதிரியாக விளங்குவோம் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Sept 2019 11:19 AM IST (Updated: 26 Sept 2019 11:19 AM IST)
t-max-icont-min-icon

அணு வினியோகக் குழுவில் உறுப்பினராகும் வாய்ப்பை நாங்கள் பெற்றால், இந்த பகுதியில் நாங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும் என பிரதமர் கூறினார்.

நியூயார்க்

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற புளூம்பொ்க் உலக தொழில் மன்ற கூட்டத்தில் அமெரிக்க  நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில்  பிரதமா் மோடி கலந்துகொண்டாா். அங்கு அவா் பேசியதாவது:-

இன்று நமக்கு முன் இருக்கும் ஒரு சவால் அணுசக்தி. ஏனென்றால், நாங்கள் அணு வினியோகக் குழுவின் (என்.எஸ்.ஜி) உறுப்பினராக இல்லாததால், அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளைப் பெறும் திறன் எங்களுக்கு உண்மையில் இல்லை. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றால், இந்த பகுதியில் நாங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும்.

"நாங்கள் உறுப்பினராக இல்லாததால், அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளை எங்களால் பெற முடியவில்லை என்று பிரதமர் கூறினார்.

உலகின் பெரும்பாலான அணு வர்த்தகத்தை என்.எஸ்.ஜி கட்டுப்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் என்.எஸ்.ஜி-க்குள் இந்தியா நுழைவதை ஆதரிக்கின்றன, அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று சீனா எதிர்த்தது.

இந்தியா மற்றும் அமெரிக்கா, மார்ச் மாதத்தில் 6 யு.எஸ். நிறுவனங்கள் இந்தியாவில் அணுசக்தி உலைகளை அமைக்கும் என அறிவித்தன.
1 More update

Next Story