உலகின் கவனத்தை பயங்கரவாதத்திற்கு திசை திருப்ப இந்தியா வாய்ப்பை எதிர்பார்க்கிறது - இம்ரான் கான்


உலகின் கவனத்தை பயங்கரவாதத்திற்கு திசை திருப்ப இந்தியா வாய்ப்பை எதிர்பார்க்கிறது - இம்ரான் கான்
x
தினத்தந்தி 28 Oct 2019 11:28 AM GMT (Updated: 28 Oct 2019 11:28 AM GMT)

காஷ்மீரில் "அட்டூழியங்களை" நியாயப்படுத்தவும், உலகின் கவனத்தை பயங்கரவாதத்திற்கு திசை திருப்பவும் இந்தியா ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறது என்று இம்ரான் கான் கூறி உள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் அரசின் தொலைக்காட்சியான பிடிவிக்கு இம்ரான் கான்  நேற்று பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்  கூறியதாவது:-

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக, இன்றைய நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாம் கறுப்பு தினமாக அனுசரிப்போம். காஷ்மீரில் சில அமைப்புகள் புனிதப் போர் நடத்தவும், ஆயுதம் ஏந்தி இந்தியப் படைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் தூண்டிவிடுகின்றன. அவ்வாறு செய்வது உண்மையில் காஷ்மீர் மக்களுக்கு விரோதமானதாகவும், பாகிஸ்தான் நலனுக்கும் எதிரானதாகவும் அமையும்.

காஷ்மீரில் நடக்கும் அட்டூழியங்களை நியாயப்படுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இந்தியா காத்திருக்கிறது. உலகின் கவனத்தைத் தீவிரவாதத்தின் பக்கம் இந்தியா திருப்பி வருகிறது. ஆதலால், காஷ்மீர் மக்களுக்கு நீண்டகாலத்துக்கு அரசியல்ரீதியான, நிர்வாகரீதியான ஆதரவை மட்டுமே வழங்க முடியும். காஷ்மீர் நிலைமையின் தன்மை குறித்து உலகத்திற்கு  மீண்டும் ஒரு முறை தெரிவிக்கப்படும்.

காஷ்மீர் மக்களிடம் கூறுகிறேன், இந்த தேசமே உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எந்தவிதமான உதவியையும் பாகிஸ்தான் வழங்கும். காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story