உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் தேர்வு

உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.
உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் தேர்வு
Published on

லண்டன்,

ஹார்வர்டு பல்கலை கழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ, 2019ஆம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.

அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடமும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9ஆவது இடமும் பிடித்துள்ளனர். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவை சேர்ந்த ஜென்சன் ஹாங் முதலிடம் பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com