ஆப்கானிஸ்தானில், பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 11 தலீபான்கள் சாவு - ஆயுதக்கிடங்கு அழிப்பு


ஆப்கானிஸ்தானில், பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 11 தலீபான்கள் சாவு - ஆயுதக்கிடங்கு அழிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 11:18 PM GMT (Updated: 29 Oct 2019 11:18 PM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக உள்ள தலீபான்களை ஒடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு வான்வழி தாக்குதலில், 53 தலீபான்கள் கொல்லப்பட்டனர்.

காபூல்,

இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள பலீல் கெல் பகுதியில், பயங்கரவாதிகள் முகாமை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் தலீபான்கள் நிலைகுலைந்தனர். அவர்களில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 8 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தலீபான்கள் பயன்படுத்திய ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. அங்கிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள், 2 மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

Next Story