உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீவிபத்து பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு + "||" + Death toll from Tezgam inferno jumps to 65 Rahim Yar Khan district govt

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீவிபத்து பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீவிபத்து பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
கராச்சி-ராவல்பிண்டி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
கராச்சி

பாகிஸ்தான் கராச்சியில் இருந்து  ராவல்பிண்டிக்கு புறப்பட்ட  தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிபத்து  ஏற்பட்டது.  இதில் தீ மள மள வென பரவி  3-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் பிடித்தது.  இதில் பலி எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்து உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் லியாகத்பூரில் உள்ள டி.எச்.கியூ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் பஹவல்பூரில் உள்ள பஹவால் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்பதற்காக முல்தானில் இருந்து ஒரு இராணுவ ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டு உள்ளது.

தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி பிரார்த்தனை மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.