அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவு


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 29 Nov 2019 10:15 PM GMT (Updated: 29 Nov 2019 9:53 PM GMT)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவானது.


* ஜப்பானில் 1982-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராகவும், ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்த யாசுஹிரோ நாகசோனி முதுமை காரணமாக காலமானார். அவருக்கு வயது 101.

* ஹாங்காங்கில் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனநாயக ஆர்வலர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு படையினருடன் சேர்ந்து பல்கலைக்கழகத்தை சுத்தப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் 4 ஆயிரம் பெட்ரோல் குண்டுகள் மற்றும் ரசாயன திரவம் நிரப்பப்பட்ட 600 பாட்டில்கள் அகற்றப்பட்டன.

* ஏமன் நாட்டின் வான்பரப்புக்குள் நுழைந்த சவுதி அரேபியாவின் விமானப்படை ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் விமானிகள் 2 பேர் பலியானதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ரிட்ச்கிரெஸ்ட் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Next Story