நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி


நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி
x
தினத்தந்தி 28 Dec 2019 3:57 AM IST (Updated: 28 Dec 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

நைஜரில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.

நியாமி,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹரம் பயங்கரவாதிகள் அண்டை நாடான நைஜரிலும் காலூன்றி பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நைஜர் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சனம் நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனங்களின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

அதனை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் உடனடியாக அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ராணுவ வீரர்கள் 14 பேர் பலியாகினர்.

அதே சமயம் இருதரப்பு மோதலில் பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை தெரிவிக்கவில்லை. கடந்த 10-ந்தேதி நைஜரின் தில்லா பெரி பிராந்தியத்தில் உள்ள ராணுவமுகாம் மீது 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 71 ராணுவவீரர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.
1 More update

Next Story