ஐக்கிய அரபு அமீரகத்திலும் பரவிய கொரோனா வைரஸ்


ஐக்கிய அரபு அமீரகத்திலும் பரவிய கொரோனா வைரஸ்
x
தினத்தந்தி 29 Jan 2020 5:30 PM GMT (Updated: 29 Jan 2020 5:30 PM GMT)

ஐக்கிய அரபு அமீரகத்தில் சீன குடும்பம் ஒன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் தற்போது 136 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தைவான், மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பரவி உள்ளது.

இந்நிலையில், மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக சீனக்குடும்பம் ஒன்று கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ‘சீனாவின் ஊகான் நகரிலிருந்து வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது’ என்றும் அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story