உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 13 வீரர்கள் பலி + "||" + Afghan security forces killed in Taliban attacks on checkpoints

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 13 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 13 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
காபூல், 

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் டார்ஷ் இ ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனைச்சாவடி மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ சோதனைச்சாவடியை சுற்றிவளைத்து குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ராணுவவீரர்கள் தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே விடியவிடிய கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. எனினும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அது மட்டும் இன்றி 4 வீரர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.