கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயற்சி ஒத்திவைப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : அமெரிக்கா  - தென்கொரியா கூட்டு ராணுவ பயற்சி ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 8:24 AM GMT (Updated: 27 Feb 2020 11:04 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா - தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சியோல்,

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், இதுவரை சுமார்  2,800 உயிர் பலியை வாங்கியுள்ளது. சீனா மட்டும் அல்லாது, தென்கொரியா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த சூழலில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா - தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  வரும் மார்ச் மாதம் இருநாட்டு ராணுவமும் கணினி- உருவகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு இருந்தன. 

தென்கொரியாவில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 1,595 சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.  தென்கொரிய ராணுவத்தில் பணியாற்றும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதையடுத்து, 9,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தனிமைப்படுத்தியுள்ள தென்கொரிய ராணுவம், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. 

Next Story