உலக செய்திகள்

“கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்'' - மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ + "||" + "We've saved you from Corona" - medical staff dancing in joy; Video is the viral on the internet

“கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்'' - மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

“கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்'' - மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
கொரோனாவிடம் இருந்து நோயாளிகளை காப்பாற்றியதற்காக மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஜிங், 

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 2760 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு இதுவரை நிரந்தர மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழலில், ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் அதை குணப்படுத்தலாம் என்ற நிலை மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்திய மகிழ்ச்சியில் மருத்துவ உதவியாளர்கள் 2 பேர் நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இதயத்தை உருக வைக்கும் வீடியோ', ‘இவர்கள் நிஜ ஹீரோக்கள்' போன்ற தலைப்புகளுடன் பலரும் அந்த நடன வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், இந்த வீடியோ கொரோனாவை எதிர்த்து போராடி வரும் சக மருத்துவ ஊழியர்களுக்கு ஊக்கத்தையும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் அளிப்பதாக இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? - மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம்
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? என்பது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி விளக்கம் அளித்தார்.
2. கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு: எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி 8-ந் தேதி ஆலோசனை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகிற 8-ந் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
3. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக சீனாவில் இன்று 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
4. கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடுவோம்: ‘நாளை இரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நில்லுங்கள்’ - நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
கொரோனாவை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், மக்கள் அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு தங்கள் வீட்டு வாசலில் ஒளிவிளக்கு ஏந்தி நிற்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
5. கொரோனா பயத்தால் போராட்டம் எதிரொலி: மேலூர் சிறை கைதிகள் மத்திய சிறைக்கு மாற்றம்
மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் கொரோனா பயத்தால் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.