பிப்ரவரி 29-ஐ தனது டூடுலாக வைத்து சிறப்பிக்கும் கூகுள்

பிப்ரவரி 29-ஐ தனது டூடுலாக கூகுள் வைத்து சிறப்பித்துள்ளது.
பிப்ரவரி 29-ஐ தனது டூடுலாக வைத்து சிறப்பிக்கும் கூகுள்
Published on

நியூயார்க்,

வழக்கமாக 28 நாட்களை கொண்ட பிப்ரவரி மாதத்தில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் கூடுதலாக ஒரு நாள் வரும். பூமி சூரியனை சுற்றி வரும் நேரத்தை கணக்கிட்டு, இந்த முறை வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் லீப் நாளான இன்று, தனது டூடுலாக பிப்ரவரி 29ஜ வைத்து கூகுள் சிறப்பித்துள்ளது.

28, 29, 1 என்ற எண்கள் கூகுள் என்ற வார்த்தையில் இணைக்கப்பட்டு, அவை குதித்துக் கொண்டிருக்கும் வகையில் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர். அதன்படி, 2020-ம் ஆண்டு லீப் ஆண்டாகும். இதையடுத்து, 2024, 2028.. என்று அடுத்தடுத்த 4 ஆண்டுகள் கழித்துதான் லீப் ஆண்டுகள் வரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com