அண்டார்டிகா தவிர 6 கண்டங்களை அலறவிடும் கொரோனா வைரஸ்


அண்டார்டிகா தவிர 6 கண்டங்களை அலறவிடும் கொரோனா வைரஸ்
x
தினத்தந்தி 29 Feb 2020 3:14 PM IST (Updated: 29 Feb 2020 4:18 PM IST)
t-max-icont-min-icon

அண்டார்டிகா தவிர்த்த மற்ற அனைத்து கண்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

லண்டன் சீனா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு இதுவரை 2,924 பேர் உயிரிழந்துள்ளனர். 60 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் 85 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

 கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டையும் சென்றைடையக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளதாகவும், இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், உலக சுகாதர அமைப்பின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

 சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.குறிப்பாக சீனாவில் இப்போது கொரோனா வைரசால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து ஐரோப்பிய நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிகமாகவும் பரவி வருகிறது.இதனால் ஒவ்வொரு கண்டங்களிலும் இருக்கும் நாடுகளில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த பட்டியலை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், உலக சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது, இது அனைத்து நாடுகளையும் அடையக் கூடும் என்று கூறியுள்ளார்.மேலும், உலக சுகாதர அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,  இந்த வைரஸ் ஒரு தொற்று நோயை கொண்டுள்ளது, உலக நாடுகள் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கின்றன. நாங்கள் உண்மையில் மிகவும் நுட்பமான சூழ்நிலையில் இருக்கிறோம், அதில் பாதிப்பு எந்த திசையிலும் நாம் அதை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார். 

தென் கொரியாவில் மொத்த கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 2,931 ஆக அதிகரித்து உள்ளது என  கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (கே.சி.டி.சி) தெரிவித்துள்ளது.நாட்டில் இதுவரை பதினேழு பேர் உயிரிழந்து உள்ளனர். 

ஆப்பிரிக்காவில் நைஜீரியா, ஆஸ்திரேலியா கண்டத்தில் நியூசிலாந்து, ஐரோப்பா கண்டத்தில் பெலாரஸ் மற்றும் லித்துவேனியா நாடுகளில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 மங்கோலியாவில் இதுவரை கொரானா பரவவில்லை என்றாலும், அண்மையில் சீனா சென்று திரும்பிய அந்நாட்டு அதிபர் பட்டுல்கா கல்ட்மாவுக்கு தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

நேற்று முதல், டென்மார்க், எஸ்டோனியா, லிதுவேனியா, நெதர்லாந்து மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் தங்களது முதல் பாதிப்பை பதிவு செய்துள்ளன. இந்த பாதிப்புகள்  அனைத்தும் இத்தாலியுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளன. 

ஐரோப்பாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 889 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் புதிதாக 45 பேருக்கும், பிரான்சில் 38 பேருக்கும் ஸ்பெயினில் 23 பேருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.

ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தே கொரோனா பெரிய அளவில் பரவுவதைகத் தடுக்க முடியும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நோய் இப்போது வேகமாக பரவுகிறது, இது இப்போது பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடக்கு இத்தாலியில் பல உயிர்களை வாங்கியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ நாட்டில் முதன்முறையாக இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நாட்டின் துணை சுகாதாரத்துறை அமைச்சர், அண்மையில் இத்தாலிக்கு சென்றுவிட்டுத் திரும்பிய இருவருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, அவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்த அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலைத் தொடர்ந்து கொரோனா வைரஸை உறுதி செய்துள்ள, இரண்டாவது நாடு மெக்சிகோ என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுகள்பாதிப்புபுதிய பாதிப்பு புதிய இறப்புசிகிச்சையில்நோயில் மீண்டவர்கள்ஆபத்தான நிலை
சீனா79,2574332,8354737,30939,1137,664
தென் கொரியா2,9315941712,8902410
இத்தாலி889 21 8224664
டயமண்ட் பிரின்ஸ்சஸ்705 6 6891036
ஈரான்388 34 28173 
ஜப்பான்23635 1993220
சிங்கப்பூர்98   29698
ஹாங்காங்93 2 61306
அமெரிக்கா663  5971
ஜெர்மனி60   44162
பிரான்ஸ்57 2 44111
குவைத்45   45  
தாய்லாந்து41   13282
பஹ்ரைன்38   38  
தைவான்34 1 2851
ஸ்பெயின்33   3122
ஆஸ்திரேலியா25   1015 
மலேசியா25   520 
இங்கிலாந்து20   128 
ஐக்கிய19   1452
எமிரேடு
கனடா161  133 
வியட்னாம்16   016 
சுவிட்சர்லாந்து15   15  
சுவீடன்11   11  
மக்காவு10   46 
ஈராக்8   8  
இஸ்ரேல்7   61 
ஆஸ்திரியா6   6  
நார்வே6   6  
ஓமன்6   6  
குரோசியா5   5  
கிரீஸ்4   4  
லெபனான்4   4  
பிலிப்பைன்ஸ்3 1 02 
பின்லாந்து3   21 
இந்தியா3   03 
மெக்சிகோ31  3  
ரொமானியா3   21 
டென்மார்க்2   2  
ஜோர்ஜியா2   2  
நெதர்லாந்து2   2  
பாகிஸ்தான்2   2  
ரஷ்யா2   02 
ஆப்கானிஸ்தான்1   1  
அல்ஜிரியா1   1  
அஜர்பைஜான்1   1  
பெலாரஸ்1   1  
பெல்ஜியம்1   01 
பிரேசில்1   1  
கம்போடியா1   01 
எகிப்து1   01 
எஸ்டோனியா1   1  
ஐஸ்லாந்து1   1  
லிதூனியா1   1  
வடக்கு மாசிடோனியா1   1  
மொனாகோ1   1  
நேபாளம்1   01 
நியூசிலாந்து1   1  
நைஜீரியா1   1  
சான் மரினோ1   1  
இலங்கை1   01 
Total:85,2171,0352,9244842,73939,5547,819
1 More update

Next Story