உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது


உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 27 March 2020 6:51 AM IST (Updated: 27 March 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது.

வாஷிங்டன், 

சீனாவில் உருவான உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த கொடிய நோயால் பலியாகினர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே போல் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

1 More update

Next Story