அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு அடுத்த 2 வாரங்களில் அதிக அளவில் இருக்கும்: டிரம்ப்


அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு அடுத்த 2 வாரங்களில் அதிக அளவில் இருக்கும்: டிரம்ப்
x
தினத்தந்தி 30 March 2020 2:25 AM GMT (Updated: 30 March 2020 4:01 AM GMT)

அமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்ச நிலையை எட்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள  கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்காவே உள்ளது.  இந்த செய்தி பதிவேற்றம் செய்யப்படும் நேரத்தில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ்  பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,42 ஆயிரமாக உள்ளது.  பலியானோர் எண்ணிக்கை 2,484 ஆக உள்ளது.  

இந்த சூழலில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும் என்று தெரிவித்தார். மேலும், சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்சநிலைக்குச் செல்லும்  எனவும், ஜூன் 1ம் தேதிக்கு மேல் விடிவு பிறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story