சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி


சீனாவில்  புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி
x
தினத்தந்தி 30 March 2020 9:11 AM IST (Updated: 30 March 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

பீஜிங், 

சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 4 பேர் பலியாகினர். 

இதன் மூலம் சீனாவில் ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 3,304  ஆக அதிகரித்துள்ளது.  சீனா முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 81 ஆயிரத்து 470-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், குணமடைந்தவர்களும் அடங்குவர்.

1 More update

Next Story