பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.8.25 லட்சம் அபராதம் - ஜெர்மனி அரசு அதிரடி


பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.8.25 லட்சம் அபராதம் - ஜெர்மனி அரசு அதிரடி
x
தினத்தந்தி 29 April 2020 12:05 AM GMT (Updated: 29 April 2020 12:05 AM GMT)

ஜென்மனியில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.8.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.

பெர்லின், 

கொரோனாவை கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தி உள்ளன. ஆனால் ஐரோப்பிய நாடான ஜெர்மனி சில வாரங்கள் மட்டுமே ஊரடங்கை அறிவித்துவிட்டு, கடந்த வாரம் நிபந்தனைகளை வெகுவாக தளர்த்தியது. பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து நடமாடவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மட்டும் அறிவுறுத்தியது.

ஆனால் அதை பெரும்பாலான மக்கள் பொருட்படுத்தாமல் தங்கள் இஷ்டம் போல் பொது இடங்களில் உலா வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெர்மனி அரசு, அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி பஸ், ரெயில்களில் தொலைதூர பயணம் மேற்கொள்வோர் மற்றும் வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்கச் செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

‘இந்த விதியை மீறுவது சட்டப்படி குற்றம் ஆகும். இதற்காக இடங்களுக்கு ஏற்றாற்போல் 25 யூரோ முதல் 10 ஆயிரம் யூரோ வரை(இந்திய மதிப்பில் ரூ.8.25 லட்சம்) அபராதம் விதிக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story