உலக செய்திகள்

தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலி + "||" + 38 killed in South Korea construction site fire

தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலி

தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலி
தென் கொரியாவில் கட்டுமான தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோல், 

தென் கொரிய நாட்டின் தலைநகர் சியோல் அருகே உள்ள இச்சியான் என்ற இடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

முன்னதாக அங்கு சுரங்க குடோன் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. தரை மட்டத்துக்கு அடியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று வெடிச் சத்தத்துடன் தீ பற்றியிருக்கிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

இந்த சம்பவத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்றும், 27 தொழிலாளர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 30 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சுரங்கப் பணியின்போது ஏற்பட்ட வெடிப்பு, இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள ஜமீன் கொரட்டூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரஜினி. இவருக்கு வசந்தி (வயது 32) என்கிற மனைவியும், தர்ஷினி என்ற ஒரு மகளும், தீபக், தர்ஷன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
2. லண்டனில் ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு தீ கட்டுக்குள் வந்ததாக தீ அணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
3. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 9- வது தளத்தில் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டதும் 9-வது தளத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
4. டெல்லி துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியதால் பதற்றம்
டெல்லியில் துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
5. மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- 9 பேர் உயிரிழப்பு
மும்பையில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது.