கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு புதிய மருந்தை அமெரிக்கா விரைவில் அறிவிக்கிறது

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான ரெமெடிசிவர் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு புதிய மருந்தை அமெரிக்கா விரைவில் அறிவிக்கிறது
Published on

வாஷிங்டன்

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பலி எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,502 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 61,656 ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.

இவற்றில் பாதிப்பு எண்ணிக்கையில் நியூயார்க் (3,06,158 பேர்) மற்றும் நியூஜெர்சி (1,16,264 பேர்) நகரங்கள் முன்னணியில் உள்ளன. இந்நகரங்களில் முறையே 23 ஆயிரத்து 474 மற்றும் 6 ஆயிரத்து 770 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய சில நல்ல செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். பரிசோதனையில் ரெமெடிசிவிர் என்ற மருந்து நோய்த்தொற்றிலிருந்து நோயாளிகள் விரைவாக மீட்க உதவும் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என கூறி உள்ளனர்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான எந்தவொரு மருந்துகளுக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் இது நியூயார்க் டைம்ஸ் தகவல் படி, ரெமெடிசிவருக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில் ரெமெடிசிவிர் தயாரிப்பாளரான கிலியட் சயின்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி உள்ளது.

அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஆய்வில், ரெமெடிசிவிர் கொடுக்கப்பட்ட நோயாளிகள் மற்ற நோயாளிகளை விட வேகமாக குணமடைந்துள்ளனர்.

மீட்புக்கான நேரத்தை குறைப்பதில் ரெமெடிசிவிர் ஒரு தெளிவான, குறிப்பிடத்தக்க, நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக தரவு காட்டுகிறது என்று டாக்டர். அந்தோணி ஃபாசி ஜனாதிபதி டொனால்டு டிரம்புடனான சந்திப்பின் போது கூறினார்.

ஆரம்ப கட்ட சோதனையின் முடிவுகள் 15 முதல் 11 நாட்கள் வரை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மீட்டெடுக்கும் நேரத்தை மேம்படுத்துகிறது. டமிஃப்ளூ காய்ச்சலுக்கு ஏற்படுத்தும் விளைவைப் போன்றது. டமிஃப்ளூ நோயாளிகளை விரைவாக குணப்படுத்தாது, ஆனால் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் காலத்தை குறைக்கலாம் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com