ஸ்புட்னிக் 5 தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க நிபுணர் குழு மறுப்பு


ஸ்புட்னிக் 5 தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க நிபுணர் குழு மறுப்பு
x
தினத்தந்தி 1 April 2021 9:45 PM GMT (Updated: 1 April 2021 9:45 PM GMT)

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க மத்திய அரசின் நிபுணர் குழு மறுப்பு தெரிவித்து விட்டது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியது.  இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வேறு சில தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வரும் மத்திய சுகாதார மந்திரி கூறினார்.

இந்நிலையில், ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்த தடுப்பூசியை பற்றி கூடுதல் தகவல்களை வழங்கும்படியும் மற்றும் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடம் நிபுணர் குழு கேட்டு கொண்டுள்ளது.

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த செப்டம்பரில் அந்நாட்டில் உபயோகத்திற்கு வந்த ஸ்புட்னிக் 5 தடுப்பூசி 91.6 சதவீதம் திறன் வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story