கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றவாளியை மன்னித்ததால் மரண தண்டனையில் இருந்து தப்பிய வாலிபர் 7 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்து கோர்ட்டு உத்தரவு

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றவாளியை மன்னித்ததால் மரண தண்டனையில் இருந்து தப்பிய வாலிபர் 7 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்து கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 April 2021 10:34 AM GMT (Updated: 15 April 2021 10:34 AM GMT)

சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆசிய நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்கள் தங்குவதற்காக முகாம் ஒன்று இருந்தது. அந்த முகாமில் தங்கியிருந்த 34 வயது வாலிபர் ஒருவர் மதுபோதையில் இருந்தார். அவரது நண்பர் ஒருவரும் மதுபோதையில் இருந்தார். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் 34 வயது வாலிபர், அவர் நண்பரை தாக்கி கொலை செய்தார்.

சார்ஜா,

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சார்ஜா நீதிமன்றம் கொலை செய்த வாலிபருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த மரண தண்டனையானது கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த மரண தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் கொலை செய்தவருக்கு மன்னிப்பு வழங்குவதாகவும், அதற்கு பதிலாக 2 லட்சம் திர்ஹாம் நஷ்ட ஈடு பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கொலை செய்யப்பட்டவருக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிறைத்தண்டனை முடிந்ததும், உடனே அவரை நாடு கடத்தவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Story