உலக செய்திகள்

துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை + "||" + Corona treatment for more than 5.44 lakh people in Turkey

துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை

துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை
துருக்கியில் இதுவாரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.
அங்காரா,

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 55,802 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 318 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35,926 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் துருக்கியில் கொரோனாவில் இருந்து இதுவரை 36.85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 5.44 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. துருக்கியில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 283 பேர் பலி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்!
மராட்டியத்தில் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனாவை வென்று இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.
3. தமிழகத்தில் இன்று மட்டும் 19,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 19,112 பேர் குணமடைந்துள்ளனர்.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.