பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 24,465 பேருக்கு கொரோனா

பிரான்சில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 24,465 பேருக்கு கொரோனா
Published on

பாரிஸ்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்து 98 ஆயிரத்து 044 ஆக உள்ளது.

ஒரே நாளில் 145 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,02,858 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 43.63 லட்சத்தை நெருங்குகிறது. சுமார் 10.31 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com