பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 29 April 2021 7:12 AM GMT (Updated: 29 April 2021 7:12 AM GMT)

பிரேசிலில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.45 கோடியாக அதிகரித்துள்ளது.

பிரேசிலியா,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன. பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் மொத்தம் 3,019 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3.98 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே நேரம் புதிதாக 77 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் இதுவரை தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1.45 கோடியாக அதிகரித்துள்ளது. 

Next Story