உலக செய்திகள்

இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து + "||" + India's corona tragedy, warning bell to the world; UNICEF system concept

இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து

இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும் என்று ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
கொரோனா ஆவேச எழுச்சி
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, ஆவேச எழுச்சியாக மாறி வருகிறது. நேற்று வாரத்தில் இரண்டாவது முறையாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் 24 மணி நேரத்தில் இறந்திருக்கிறார்கள்.இந்த தருணத்தில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஐ.நா.சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப், உயிர் காக்கும் மருந்துகளையும், முக ஷீல்டுகளையும் அனுப்பியது.

எச்சரிக்கை மணி
இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறியதாவது:-

இந்தியாவின் சோகமான நிலைமை நம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். இப்போது உலகம் முன்வந்து, இந்தியாவுக்கு உதவாவிட்டால், வைரஸ் தொடர்பான இறப்புகள் பிராந்தியத்திலும், உலகமெங்கும் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரழிவை தடுப்போம்
யுனிசெப் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா அட்ஜெய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

பேரழிவைத்தடுக்க அரசுகள் தங்கள் அதிகாரத்துக்குள்ளான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சர்வதேச சமூகம், தாமதமின்றி முன்வந்து உதவ வேண்டும்.தெற்காசியாவில் கொரோனாவால் 2 லட்சத்து 28 ஆயிரம் குழந்தைகள், 11 ஆயிரம் தாய்மாரின் உயிர்கள் பறிபோய் உள்ளது. வைரஸ்களுக்கு எல்லை கிடையாது. நாம் உலக சமுதாயமாய் ஒன்றுபட்டு, இந்த பேரழிவை தடுத்து நிறுத்தி நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்: ஐ.நா.
உலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா 5-வது இடம் பிடித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
2. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; மழையால் 4 ஆம் நாள் ஆட்டம் ரத்து
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
5. கொரோனா பரவலை தடுப்பதை விட நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம்: அமர்தியா சென் குற்றச்சாட்டு
கொரோனா பரவலை தடுப்பதை விட தனது செயலுக்காக நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டியது என்று பொருளாதார நிபுணர் அமர்தியா சென் குற்றம் சாட்டினார்.