உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16.42 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16.42- கோடியாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16.42 கோடியாக உயர்வு
Published on

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.42 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 164,255,718 -பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,29,73,670 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34,03,717- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 17,878,331- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com