உலக செய்திகள்

ஐ.எஸ். அமைப்புடன் மோதல்: போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம் + "||" + I.S. Conflict with the organization: Death of the leader of the Boko Haram organization

ஐ.எஸ். அமைப்புடன் மோதல்: போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்

ஐ.எஸ். அமைப்புடன் மோதல்:  போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனான மோதலில் போகோ ஹரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார்.
வாஷிங்டன்,

மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் போகோஹரம் என்ற பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது.  கடந்த 2009ம் ஆண்டு ஊடுருவலுக்கு பின்னர் தொடர்ந்து பல கொடூர தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டு வருகிறது.  அந்த அமைப்பின் தலைவராக அபுபக்கர் ஷேகாவ் செயல்பட்டு வந்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்புடன் கைகோர்த்து அந்த அமைப்பு புதிய பெயருடன் செயல்பட தொடங்கியது.  எனினும், இந்த அமைப்புக்கு புதிய தலைவரின் பெயரை ஐ.எஸ். அமைப்பு அறிவித்தது.  இதில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதனால், ஷேகாவ் மீண்டும் போகோஹரம் அமைப்பின் தலைவராக செயல்பட்டார்.

இந்த நிலையில், சம்பீசா வன பகுதியில் திம்புக்து என்ற இடத்தில் அமைந்திருந்த ஷேகாவின் தளத்திற்குள் புகுந்து நூற்றுக்கணக்கான ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்த தொடங்கினர்.  இதில் அவர்களிடம் இருந்து தப்பிக்க, உடலில் கட்டியிருந்த தற்கொலை வெடிகுண்டு கவசம் ஒன்றை வெடிக்க செய்து ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 7 வாகனங்கள் மீது பால் வண்டி மோதல்: 4 பேர் பலி; பலர் காயம்
அமெரிக்காவில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. மோதலில் ஈடுபட்ட மந்திரியை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும்: கோவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தமிழக நிதி அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட மந்திரியை, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோவா எம்.எல்.ஏ.வான சுதின் தாவலிக்கர் வலியுறுத்தி உள்ளார்.
3. சீனாவில் காரை கொண்டு மனைவி மீது மோதல்; 7 பேருக்கு கத்திக்குத்து: கணவன் வெறிச்செயல்
சீனாவில் பழிவாங்கும் நோக்கில் காரை கொண்டு மனைவி மீது மோதிய கணவரை தடுக்க சென்ற 7 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
4. திருத்தணி அருகே விபத்து: மின்கம்பம் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கணவன், மனைவி படுகாயம்
திருத்தணி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். இதனால் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
5. கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
கேரம் விளையாட்டில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது.