உலக செய்திகள்

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளித்தால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: இம்ரான்கான் + "||" + We will negotiate with India if Kashmir is given special status again: Imran Khan

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளித்தால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: இம்ரான்கான்

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளித்தால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: இம்ரான்கான்
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளித்தால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இம்ரான்கான் கூறியுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, திடீர் திருப்பமாக, எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டன. பதற்றத்தை தணிப்பது குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில், நேற்று பாகி்ஸ்தான் மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் இம்ரான்கான் நேரலையில் பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இம்ரான்கான் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை

2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதிக்கு முன்பு காஷ்மீரில் இருந்த நிலைமையை (சிறப்பு அந்தஸ்து) மீண்டும் கொண்டு வந்தால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யாமல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், காஷ்மீர் மக்களை நாங்கள் கைவிட்டதுபோல் ஆகிவிடும். எனவே, 2019-ம் ஆண்டு எடுத்த நடவடிக்கையை இந்தியா திரும்ப பெற்றுக்கொண்டால், அதனுடன் நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினைகளை பேசிய இம்ரான்கான், ‘விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாக பாடுபட்டு வருகிறோம். இனிவரும் காலத்தில் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம்’ என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
2. காஷ்மீர்: எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த டிரோன் விமானத்தை போலீசார் கைப்பற்றினர்.
3. காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சாலையோரம் பிணமாக மீட்பு
கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதி சாலைப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
4. காஷ்மீர்: ‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் 500 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை அமைப்பு
‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் காஷ்மீரில் 500 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
5. ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு - பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் கூறிய காங்கிரஸ் தலைவர்
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பாகிஸ்தானிய ஊடகவியலாளரிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.