உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.30 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.30 கோடியாக உயர்வு
Published on

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 லட்சத்து 7 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 30 லட்சத்து 33 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 16 லட்சத்து 57 ஆயிரத்து 893 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 38 கோடியே 74 லட்சத்து 65 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 95 லட்சத்து 17 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 60 லட்சத்து 50 ஆயிரத்து 420 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com