ஜப்பான் நிலநடுக்கம்; காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பானில் டோக்கியோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது.
ஜப்பான் நிலநடுக்கம்; காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
Published on

டோக்கியோ,

ஜப்பானில் டோக்கியோ நகரில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவானது என முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு 5.9 என குறைத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலநடுக்கத்திற்கு 5 பேர் காயமடைந்து உள்ளனர் என்று முதற்கட்ட தகவல் தெரிவித்தது. இந்நிலையில், காயமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்து உள்ளது என கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com