இந்திய பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சி அடையும் - சர்வதேச நிதியம் கணிப்பு


இந்திய பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சி அடையும் - சர்வதேச நிதியம் கணிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 7:17 PM GMT (Updated: 12 Oct 2021 7:17 PM GMT)

இந்திய பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 சதவீத சரிவை சந்தித்தது. இது நடப்பு நிதி ஆண்டில் 9.5 சதவீத வளர்ச்சியை அடையும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) கணித்துள்ளது.

பொருளாதார வல்லரசு நாடான சீனா, நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 5.6 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி காணும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 5.9 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிய வந்துள்ளது.

Next Story