உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு + "||" + G20 countries to help sustain financial stability in Afghanistan

ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு

ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு
ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ரோம்,

இத்தாலி நடத்திய ஜி-20 நாடுகள் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த ஜி-20 நாடுகள் கூட்டத்தை இத்தாலி டிஜிட்டல் முறையில் நடத்தியது.தலீபான்களின் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அது ஆப்கான் தேசத்து  மக்கள் மீது பெரும் சுமையாய் விழும் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும், அந்நாட்டின் சமநிலைமைக்கு இது குந்தகம் விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா.சபை மிக முக்கிய பங்காற்றும். எனவே அந்நாட்டில் ஐ.நா.சபை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆப்கனில் ஐ.நா. சபை பணியாளர்கள் மற்றும் மனிதநேய பணியாளர்களுக்கு முழுமையான, பாதுகாப்பான, தங்கு தடையற்ற உரிமைகள் பாலின வேறுபாடின்றி   வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆப்கன் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில்  அகதிகளாக செல்லாமல் இருக்கவும், மனிதாபிமான பேரழிவைத் தடுக்கவும், மனிதநேய செயல்பாட்டாளர்களின் சேவை அங்கு கட்டாயம் தேவை என்கிற நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; 100 பேர் பலி எனத் தகவல்
மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 100- க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
2. ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை: இந்தியாவில் இருந்து கோதுமை அனுப்ப ஐ.நா. கோரிக்கை
ஆப்கானிஸ்தானுக்கு தேவையான கோதுமையை இந்தியாவில் இருந்து பெற இந்திய அரசுடன் ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
3. ஆப்கானிஸ்தான்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை கைது செய்த தலீபான்கள்...!
ஆப்கானிஸ்தானில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளை தலீபான்கள் கைது செய்துள்ளனர்.
4. தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு
தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்பு படை வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
5. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.