போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து 3 கப்பல்கள் தானியங்களுடன் புறப்பட்டன


போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து 3 கப்பல்கள் தானியங்களுடன் புறப்பட்டன
x

கடந்த 2-ந்தேதி உக்ரைனின் ஒடசோ துறைமுகத்தில் இருந்து 26 ஆயிரம் டன் சோளத்துடன் சரக்கு கப்பல் லெபனானுக்கு புறப்பட்டு சென்றது.

கீவ், ஆக.6-

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் காரணமாக உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனில் இருந்து வெளிநாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைப்பட்டது.

இதனால் உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் எழுந்ததால் ஐ.நா. இதில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வுகண்டது. அதன்படி நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைனும், ரஷியாவும் கையெழுத்திட்டன.

அதை தொடர்ந்து போர் தொடங்கிய 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 2-ந்தேதி உக்ரைனின் ஒடசோ துறைமுகத்தில் இருந்து 26 ஆயிரம் டன் சோளத்துடன் சரக்கு கப்பல் லெபனானுக்கு புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து நேற்று மேலும் 3 சரக்கு கப்பல்கள் தானியங்களுடன் புறப்பட்டு சென்றன. இந்த கப்பல்களில் 58 ஆயிரம் சோளம் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்த கப்பல்கள் துருக்கி சென்று அங்கு சோதனையை முடித்தப்பிறகு செல்ல வேண்டிய அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

1 More update

Next Story