பெரு நாட்டில் இன்கா பேரரசுக்கு முந்தைய 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு - 800 ஆண்டுகள் பழமையானது என தகவல்


பெரு நாட்டில் இன்கா பேரரசுக்கு முந்தைய 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு - 800 ஆண்டுகள் பழமையானது என தகவல்
x

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறைகள் ‘சான்கே’ கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

லிமா,

தென் அமெரிக்க நாடான பெருவில் இன்கா பேரரசுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 30 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கல்லறைகள் 'சான்கே' கலாச்சாரத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் என அவர்கள் கூறியுள்ளனர்.

'சான்கே' மக்கள் பெரு நாட்டின் மத்திய பள்ளத்தாக்கு பதிகளில் சுமார் 1000 முதல் 1500-ம் ஆண்டு வரை வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சான்கே கலாச்சாரத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட அகழாய்வு சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




Next Story