அமெரிக்காவில் ஓஹியோ நகரில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி; மர்மநபரை தேடும் பணி தீவிரம்!


அமெரிக்காவில் ஓஹியோ நகரில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி; மர்மநபரை தேடும் பணி தீவிரம்!
x

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஓஹியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பு(எப் பி ஐ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நபர் கண்மூடித்தனமாக பொதுமக்களை சுட்டுவிட்டு வெள்ளை நிற காரில் தப்பித்துவிட்டதாக போலீசார் கூறினர்.

அமெரிக்காவின் டாய்டன் நகருக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நகரமான பட்லர் டவுன்ஷிப்பில் சுமார் 8000 பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நட்த்தி விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்காவில் ஆண்டுக்கு 40,000 மரணங்கள் துப்பாக்கிச் சூடு போன்ற மரணங்களால் நிகழ்கின்றன. அண்மைக்காலமாக இந்த துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரித்துள்ளது.


Next Story